tamilnadu

img

குண்டுவெடிப்பில் தப்பிய இலங்கை கிரிக்கெட் வீரர்

கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்து 359 பேர் பலியானார்கள். நீர்க்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது.இந்த தேவாலயம் அருகில்தான் இலங்கை கிரிக்கெட் அணியின்ஆல்ரவுண்டர் தசுன் ஷனாகா வீடுஉள்ளது. சனிக்கிழமை முழுவதும் வெளியே சென்றிருந்ததால் ஞாயிற்றுக்கிழமை தாமதமாக எழுந்துள்ளார். இதனால் ஈஸ்டர் பிரார்த்தனைக்கு தசுன் ஷனாகா செல்லவில்லை.அதிர்ஷ்டவசமாக உயிர்தப் பிய ஷனகா கூறுகையில்,”ஈஸ்டர் தினத்தன்று செபஸ்டியன் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் தான் தூங்கச்சென் றேன். முந்தைய நாள் வெளியில் சென்றிருந்ததால் மிகவும் சோர் வாக இருந்தேன். அதனால் காலையில் தாமதமாக எழுந்ததால் தேவாலயத்திற்குச் செல்லவில்லை. தூங்கி எழும் நேரத்தில் தேவாலயத்தில் வெடி வெடிக்கும் சத்தம்கேட்டது. நான் சம்பவ இடத்திற்குவிரைந்தேன். தேவாலயம் முழுவதும் சிதைந்து காணப்பட்டது. உயிரிழந்தவர்களை மக்கள் வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்கள். தேவாலயம் சென்றிருந்த எனது அம்மாவும், பாட்டியும் குண்டுவெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்துவிட்டனர். ஆனால், பாட்டியின் தலையில் கல் ஒன்றுபலமாகத் தாக்கியதால் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. தெருக்களில் நடக்கவேபயமாக உள்ளது” என்று கூறினார்.

;